ADDED : ஜூலை 30, 2024 03:28 AM
தாராபுரம்: தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி இணைந்து, தாராபுரத்தில் புகையிலை மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை, நேற்று நடத்தின.
மூன்றாம் கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் மினோ துவக்கி வைத்தார். நீதிமன்ற வளாகம் முன் துவங்கிய பேரணி போலீஸ் ஸ்டேஷன் எதிரே நிறைவடைந்தது. வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான சக்திவேல், குற்றவியல் நடுவர் உமா மகேஸ்வரி மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மதிவதனி வணங்காமுடி உள்பட பலர் பங்கேற்றனர்.