Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கோவிலுக்கு சொந்தமான நிலம் ஏலம் ஒத்திவைப்பு; வாக்குவாதம், ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு

கோவிலுக்கு சொந்தமான நிலம் ஏலம் ஒத்திவைப்பு; வாக்குவாதம், ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு

கோவிலுக்கு சொந்தமான நிலம் ஏலம் ஒத்திவைப்பு; வாக்குவாதம், ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு

கோவிலுக்கு சொந்தமான நிலம் ஏலம் ஒத்திவைப்பு; வாக்குவாதம், ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு

ADDED : ஜூன் 01, 2024 06:41 AM


Google News
காங்கேயம் : காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 586 ஏக்கரில், தற்போது இனாம் நிலம், 131 ஏக்கரை குத்தகைக்கு விட, இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் ரத்தினாம்பாள் தலைமையில் கோவில் வளாகத்தில், நேற்று காலை ஏலம் நடந்தது. நிலங்களை அனுபவித்து வரும் விவசாயிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், இதுவரை பொது ஏலம் நடந்ததில்லை என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழக விவசாயி பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில், ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் குமரகுரு, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற்கு இந்து முன்னணி திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் கந்தசாமி, திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சதீஸ்குமார், காங்கேயம் நகர செயலாளர் நாகராஜ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதத்துடன், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். நிர்வாக காரணங்களால் ஏலம் ஒத்தி வைக்கப்படுவதாக, அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டதால் விவசாயிகள் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us