/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/50 ஏக்கரில் சோலார் பேனல் அமைக்க அனுமதி நம்பியூர் பேரூராட்சி தலைவர் மீது குற்றச்சாட்டு50 ஏக்கரில் சோலார் பேனல் அமைக்க அனுமதி நம்பியூர் பேரூராட்சி தலைவர் மீது குற்றச்சாட்டு
50 ஏக்கரில் சோலார் பேனல் அமைக்க அனுமதி நம்பியூர் பேரூராட்சி தலைவர் மீது குற்றச்சாட்டு
50 ஏக்கரில் சோலார் பேனல் அமைக்க அனுமதி நம்பியூர் பேரூராட்சி தலைவர் மீது குற்றச்சாட்டு
50 ஏக்கரில் சோலார் பேனல் அமைக்க அனுமதி நம்பியூர் பேரூராட்சி தலைவர் மீது குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 14, 2025 07:11 AM
நம்பியூர்: சோலார் பேனல் அமைக்க தன்னிச்சையாக அனுமதி கொடுத்த-தாக, நம்பியூர் பேரூராட்சி தலைவர் மீது குற்றச்சாட்டு எழுப்பி, பேரூராட்சி அலுவலகத்தை, விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு, 15வது வார்டுக்கு உட்பட்ட இச்சிப்பாளையம், வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 50 ஏக்கர் பரப்பளவில் தனியார் நிறுவனம் சார்பில் சோலார் பேனல் அமைத்துள்ளனர். பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெறாமல், பேரூராட்சி தலைவர் செந்தில்கு-மாரிடம், தன்னிச்சையாக தடையின்மை சான்று பெற்று அமைத்துள்ளனர். இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரி-வித்து, பேரூராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: சோலார் பேனலுக்கு தண்ணீர் தேவைக்காக, 50 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்-பட்டு தண்ணீர் எடுக்கப்படுவதாக கூறுகின்றனர்.இதனால் அப்ப-குதியில், 2,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் பாதிக்கப்பட்-டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும். சோலார் பேனல் அமைக்கப்பட்டதால் நான்கு பக்கமும் பிரிந்து சென்ற மழை நீரானது, ஒரே பகுதியில் வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. அந்த நீரோடை பகுதியில், 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதனால் சில தினங்களுக்கு முன் பெய்த மழையால் வீடுக-ளுக்குள் தண்ணீர் புகுந்து சேதம் ஏற்பட்டது. முறையாக அனுமதி பெறாமல் அமைக்கப்பட்ட சோலார் பேனல்களை அகற்ற வேண்டும். இவ்வாறு கூறினர்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ருக்மணியிடம் கேட்ட-போது, ''நான் கடந்த வாரம்தான், செயல் அலுவலராக பொறுப்-பேற்றுள்ளேன். இதுகுறித்து என்ன நடந்தது என்று எனக்கு தெரி-யவில்லை. உரிய அலுவலர்களிடம் கேட்டு, நடவடிக்கை மேற்-கொள்ளப்படும்,'' என்றார்.