4 ஆண்டுகளுக்கு பின் டவுன் பஸ் இயக்கம்
4 ஆண்டுகளுக்கு பின் டவுன் பஸ் இயக்கம்
4 ஆண்டுகளுக்கு பின் டவுன் பஸ் இயக்கம்
UPDATED : ஜூலை 22, 2024 12:42 PM
ADDED : ஜூலை 21, 2024 09:19 AM
அந்தியூர்: அந்தியூரை அடுத்த காக்காயனுார் மலை கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதிக்கு, பி23 அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. காக்காயனுார், அந்தியூர், இரட்டைகரடு வழியாக பவானி சென்றது. பல்வேறு காரணங்களால், பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் காக்காயனுார் பகுதி மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் அவதிப்பட்டனர்.
பக்கத்து ஊருக்கு நடந்து சென்று பயணித்தனர். பழையபடி தங்கள் பகுதிக்கு டவுன் பஸ் இயக்க, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்ச-லத்திடம், மனு கொடுத்தனர். இதை தொடர்ந்து ஏற்கனவே இயக்கப்பட்ட பி23 டவுன் பஸ், நேற்று முதல் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டது. எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் கொடியசைத்து பயணத்தை துவக்கி வைத்தார்.