/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/235 சவரன் நகை திருட்டு: குற்றவாளியை பிடிக்க போலீசார் கர்நாடகா விரைவு235 சவரன் நகை திருட்டு: குற்றவாளியை பிடிக்க போலீசார் கர்நாடகா விரைவு
235 சவரன் நகை திருட்டு: குற்றவாளியை பிடிக்க போலீசார் கர்நாடகா விரைவு
235 சவரன் நகை திருட்டு: குற்றவாளியை பிடிக்க போலீசார் கர்நாடகா விரைவு
235 சவரன் நகை திருட்டு: குற்றவாளியை பிடிக்க போலீசார் கர்நாடகா விரைவு
ADDED : ஜூன் 12, 2024 05:36 PM
ஈரோடு: ஈரோடு ஆடிட்டர் வீட்டில் நடந்த, 235 சவரன் நகை திருட்டில் குற்றவாளியை பிடிக்க போலீசார் கர்நாடகா சென்றுள்ளனர்.
ஈரோடு, சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ., காலனி 7வது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 69, ஆடிட்டர். கடந்த, 8 காலை மனைவி சாதானாவுடன் தேனிக்கு சென்றார். மறுநாள் காலை அவரது வீட்டில், 235 சவரன் நகை, 48 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது.
சூரம்பட்டி போலீசார் 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்தபோது, ஒருவர் மட்டும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி, சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையில் போலீசார் கர்நாடகா மாநிலம் சென்றுள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
கர்நாடகா மாநில பதிவெண் கொண்ட காரில் மர்ம நபர் கடந்த, 8 காலை திருட்டு நடந்த பகுதிக்கு வந்து நோட்டமிட்டுள்ளார். நள்ளிரவு, 12:40 மணிக்கு ஆடிட்டர் வீட்டுக்குள் சென்று, அதிகாலை 4:50 மணி வரை இருந்துள்ளார்.
அதன் பின் வீட்டின் பின்புறம் வழியே வெளியே சென்றுள்ளார். ஈரோட்டை விட்டு அதிகாலையே வெளியேறியவர், முகத்தை அடையாளம் காணாமல் இருக்க காரில் இருந்து கீழே இறங்கவில்லை. கர்நாடகா மாநில எல்லையில் உள்ள டோல்கேட்டில் காரை நிறுத்தி கன்னடத்தில் அவர் உரையாடியுள்ளார்.
திருட்டில் ஈடுபட்டது பழங்குற்றவாளி. பதற்றமில்லாமல் திருட்டில் ஈடுபட்டுள்ளார். ஆடிட்டர் வெளியூர் செல்வது தெரிந்தே திருட்டை அரங்கேற்றி உள்ளார். ஆடிட்டருக்கு நெருக்கமானவர்களால் தகவல் அறிந்து, மர்ம நபர் திருட வந்திருக்கலாம். இவ்வாறு கூறினர்.