/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டம்: மாவட்டத்தில் 213 சாலைகள் சீரமைப்பு முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டம்: மாவட்டத்தில் 213 சாலைகள் சீரமைப்பு
முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டம்: மாவட்டத்தில் 213 சாலைகள் சீரமைப்பு
முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டம்: மாவட்டத்தில் 213 சாலைகள் சீரமைப்பு
முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டம்: மாவட்டத்தில் 213 சாலைகள் சீரமைப்பு
ADDED : ஜூன் 12, 2024 05:39 PM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 213 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
கிராமப்புறங்களில் ஏற்கனவே உள்ள சாலைகளை பராமரிக்கவும், புதிய சாலைகள் அமைக்கவும், சாலைகளே இல்லாத பகுதியிலும், பிற காரணங்களுக்காக சாலை மேம்பாடு செய்யப்படாத பகுதிகளுக்கும், முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம், 2021-22ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அடுத்த, 10 ஆண்டுகளில், 2,200 கி.மீ., இரு வழித்தட சாலைகளை, 4 வழித்தட சாலைகளாகவும், 6,700 கி.மீ., நீளமுள்ள ஒரு வழித்தட மற்றும் இடை வழித்தட சாலைகளை, இரு வழித்தட சாலைகளாக அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது.
இத்திட்டத்தில் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளை தேர்வு செய்து, முன்னுரிமை வழங்கி சீரமைப்பு செய்கின்றனர். குறிப்பாக பஸ்கள் செல்லும் சாலைகள், குக்கிராமங்களை இணைக்கும் ஒற்றை இணைப்பு சாலைகள், பின் தங்கிய பஞ்சாயத்து யூனியன் சாலைகள், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்டத்தின் முக்கிய சாலைகள், புறவழிச்சாலைகளை இணைக்கும் சாலைகள், பள்ளிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சந்தைகளை இணைக்கும் சாலைகள் மேம்பாட்டுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில், 213 கிராம சாலைகள் மேம்படுத்தும் பணிக்காக எடுக்கப்பட்டது. இதில், 181 சாலைகள் மேம்படுத்தும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டன. 32 சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், 9 சாலைகள் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. சாலையின் குறுக்கே சிறு பாலங்கள், தடுப்பு சுவர்கள் அமைத்தல் போன்ற பணிகள் உள்ளதால், சாலை அமைக்கும் பணியை உடனடியாக முடிக்க முடியாமல் உள்ளது.
இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முழுமையாக சாலைப்பணிகள் முடிக்கப்பட்டு விடும் என, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.