/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கார்கள் மோதலில் 2 பேர் பலி; மூவர் படுகாயம்கார்கள் மோதலில் 2 பேர் பலி; மூவர் படுகாயம்
கார்கள் மோதலில் 2 பேர் பலி; மூவர் படுகாயம்
கார்கள் மோதலில் 2 பேர் பலி; மூவர் படுகாயம்
கார்கள் மோதலில் 2 பேர் பலி; மூவர் படுகாயம்
ADDED : ஜூன் 22, 2024 01:12 AM
காங்கேயம் : வெள்ளகோவில் அருகே கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில், எலக்ட்ரீஷியன்கள் இருவர் பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்தவர் சதீஸ்குமார், 22; வெள்ளகோவில், உப்புப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் சேதுபதி, 24; வெள்ளகோவில், செம்மாண்டம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் பாண்டி, 30; மூவரும் எலக்ட்ரீசியன்கள்.மூவரும் மாருதி ஜென் காரில் சேலம் சென்று விட்டு, வெள்ளகோவிலுக்கு நேற்று திரும்பினர். பாண்டி காரை ஓட்டியுள்ளார். முத்துார், சாந்தலிங்கபுரத்தை சேர்ந்தவர் கவியரசு, 37; முத்துார், சக்கரைபாளையத்தை சேர்ந்தவர் சிவ கார்த்திக், 32; இவர்கள் இருவரும் ஹூண்டாய் ஐ-20, காரில் முத்துாரிலிருந்து ஈரோட்டுக்கு சென்றனர். காரை கவியரசு ஓட்டினார். முத்துார்-ஈரோடு சாலையில், ஒரு டிராவல்ஸ் கம்பெனி அருகில் இரு கார்களும், மாலை, 5:00 மணிக்கு வந்தபோது எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் சேதுபதி மற்றும் பாண்டி சம்பவ இடத்தில் பலியாகினர். தலையில் பலத்த காயமடைந்த சதீஸ்குமார், மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் நரம்பியல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மற்றொரு காரில் வந்த கவியரசு, சிவகார்த்திக் காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.