/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வெள்ளகோவில் அருகே நாய் கடித்து 2 ஆடு பலி வெள்ளகோவில் அருகே நாய் கடித்து 2 ஆடு பலி
வெள்ளகோவில் அருகே நாய் கடித்து 2 ஆடு பலி
வெள்ளகோவில் அருகே நாய் கடித்து 2 ஆடு பலி
வெள்ளகோவில் அருகே நாய் கடித்து 2 ஆடு பலி
ADDED : ஜூலை 02, 2025 01:33 AM
வெள்ளகோவில், வெள்ளகோவில் அருகே கரைவலசு கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி, 45; தனது தோட்டத்தில் பட்டி அமைத்து, 35 ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை பட்டியில் இருந்த ஆடுகள் ஒரே சமயத்தில் கத்தியுள்ளன.
பக்கத்து தோட்டத்துக்காரர் சென்று பார்த்தபோது இரு நாய்கள் ஆடுகளை கடித்து குதறியபடி இருந்தன. அவற்றை துரத்தி விட்டு பார்த்ததில், இரு ஆடுகள் இறந்து விட்டது தெரிய வந்தது. நாய்களுக்கு ஆடுகள் பலியாகும் சம்பவம் மீண்டும் தொடங்கியுள்ளதால், ஆடு வளர்ப்போர் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.