ADDED : ஜூன் 28, 2024 01:48 AM
கோபி, கோபி சப்-டிவிஷன் போலீஸ் ஸ்டேசன் எல்லைக்கு உட்பட்ட மக்களிடம், போலீசார் சார்பில் குறைதீர் முகாம், கோபியில் நேற்று நடந்தது. எஸ்.பி., ஜவஹர் தலைமை வகித்தார். இதில், 122 பேர் மனு அளித்தனர். 67 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.
நிருபர்களிடம் எஸ்.பி., கூறியதாவது: மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்காணிக்க, ஏ.டி.எஸ்.பி., தலைமையில் தண்டனை வாங்கி கொடுக்கும் அளவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை, 265 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் இதுவரையில், மூவர் குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோபி டவுனில், 85 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரு கஞ்சா வியாபாரியின், மூவாயிரம் சதுர அடி கொண்ட நிலத்தை பறிமுதல் செய்துள்ளோம். கஞ்சா விற்பனை செய்து, எவரேனும் சொத்து
வாங்கியிருந்தாலோ, வங்கி கணக்கில் பணம் இருந்தாலோ அவை பறிமுதல் செய்யப்படும். மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவோர் வெகுவாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார். அப்போது கோபி டி.எஸ்.பி., தங்கவேல், இன்ஸ்பெக்டர் காமராஜ்
உடனிருந்தார்.