/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நுாறு நாள் வேலை கேட்டு தொழிலாளர் போராட்டம்:சத்தியில் 3,000க்கும் மேற்பட்டோர் குவிந்தனர் நுாறு நாள் வேலை கேட்டு தொழிலாளர் போராட்டம்:சத்தியில் 3,000க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்
நுாறு நாள் வேலை கேட்டு தொழிலாளர் போராட்டம்:சத்தியில் 3,000க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்
நுாறு நாள் வேலை கேட்டு தொழிலாளர் போராட்டம்:சத்தியில் 3,000க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்
நுாறு நாள் வேலை கேட்டு தொழிலாளர் போராட்டம்:சத்தியில் 3,000க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்
ADDED : ஜூலை 10, 2024 02:39 AM
சத்தியமங்கலம்;தாளவாடி, பவானிசாகர், சத்தி ஒன்றியங்களை சேர்ந்த, 40 ஊராட்சிகளில், 12 ஆயிரம் தொழிலாளர்கள், 20 நாட்களுக்கு முன் நுாறு நாள் வேலை கேட்டும், வேலையில்லாத நாட்களுக்கு நிவாரணம் கேட்டும் அந்தந்த ஊராட்சிகளில் மனு கொடுத்தனர்.
மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், பவானிசாகர் இ.கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் தலைமையில், 3,000க்கும் மேற்பட்டோர் சத்தி தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை, ௧௦:௩௦ மணிக்கு வந்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கோபி ஆர்.டி.ஓ., கண்ணப்பன், சத்தி டி.எஸ்.பி.,
சரவணன் மற்றும் சத்தி, தாளவாடி, பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறவே, மதியம், 2:45 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.
5 ஊராட்சிகளில் மனு
டி.என்.பாளையம் யூனியனில் நுாறு நாள் வேலை கேட்டு,
2,௦௦௦க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், 5 ஊராட்சிகளில் நேற்று மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில்,
தமிழகத்தில் பல லட்சம்
தொழிலாளர்கள் பயன் பெற்று வருகின்றனர். லோக்சபா தேர்தலால் வேலை நிறுத்தப்பட்டது.
ஓட்டு எண்ணிக்கை முடிந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் வேலை வழங்கப்படாததால், வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். மத்திய அரசு மேலும் தாமதம் செய்யாமல், உடனடியாக வேலை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
டி.என்.பாளையம் யூனியன் புஞ்சை துறையம்பாளையம், கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம், பெருமுகை, அரக்கன்கோட்டை என ஐந்து ஊராட்சிகளில்,
இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள, 2,௦௦௦க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அந்தந்த ஊராட்சிகளில் மனு கொடுத்தனர்.