/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு ஜவுளி சந்தையில் ஆடி விற்பனை துவக்கம் ஈரோடு ஜவுளி சந்தையில் ஆடி விற்பனை துவக்கம்
ஈரோடு ஜவுளி சந்தையில் ஆடி விற்பனை துவக்கம்
ஈரோடு ஜவுளி சந்தையில் ஆடி விற்பனை துவக்கம்
ஈரோடு ஜவுளி சந்தையில் ஆடி விற்பனை துவக்கம்
ADDED : ஜூலை 09, 2024 10:01 PM
ஈரோடு:ஈரோட்டில் நடக்கும் ஜவுளி சந்தைக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகள், கடைக்காரர்கள், மக்கள் வருவர். கடந்த மார்ச், 15க்குப்பின் லோக்சபா தேர்தல், கடும் வெப்பம் போன்ற காரணத்தால் மொத்த வியாபாரிகள் வருகை குறைந்து, விற்பனை சரிந்தது. இந்நிலையில் ஆடிப்பிறப்பை முன்னிட்டு, நேற்று நடந்த ஜவுளி சந்தையில், அனைத்து கடைகளிலும் துணிகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டது.
சில்லறை வியாபாரிகள் அதிகமாக வேட்டி, சட்டை, துண்டு, லுங்கி, சுடிதார், சேலை, சிறுவர், சிறுமியர் ஆடை, இரவு ஆடைகளை வாங்கி சென்றனர். வெளி மாநில வியாபாரிகள், மொத்த விற்பனைக்காக பல்வேறு ரக துணிகளை வாங்கினர். ஆடி மாத விற்பனை இன்னும் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும் என்பதால், வரும் வாரங்களில் விற்பனை உயரும் என, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.