/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வீ.வ.வா., குடியிருப்பு மின் மோட்டார் இணைப்பு 'கட்' : குடங்களுடன் குடியிருப்புவாசிகள் போராட்டம் வீ.வ.வா., குடியிருப்பு மின் மோட்டார் இணைப்பு 'கட்' : குடங்களுடன் குடியிருப்புவாசிகள் போராட்டம்
வீ.வ.வா., குடியிருப்பு மின் மோட்டார் இணைப்பு 'கட்' : குடங்களுடன் குடியிருப்புவாசிகள் போராட்டம்
வீ.வ.வா., குடியிருப்பு மின் மோட்டார் இணைப்பு 'கட்' : குடங்களுடன் குடியிருப்புவாசிகள் போராட்டம்
வீ.வ.வா., குடியிருப்பு மின் மோட்டார் இணைப்பு 'கட்' : குடங்களுடன் குடியிருப்புவாசிகள் போராட்டம்
ADDED : ஜூலை 21, 2024 11:10 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 49வது வார்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முத்தம்பாளையம் பகுதி---7 குடியிருப்பு உள்ளது. இங்கு வீட்டு வசதி வாரியத்தின் குடிசை மாற்று திட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. எட்டு கட்டடங்களில் தலா, 32 வீடுகள் வீதம், 256 வீடுகள் உள்ளன. இதில், 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். நேற்றிரவு இவர்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஈரோடு பெரியார் நகர் பகுதி, குளத்துப்பண்ணை பகுதியில் நீண்ட காலமாக குடியிருந்து வந்தோம். இங்கு எந்த அடிப்படை வசதியும் இல்லாததால், நாங்கள் வர விரும்பவில்லை. அதிகாரிகள் அனைத்து வசதிகளையம் செய்து தருவதாக கூறி அனுப்பினர்.
நம்பி வந்ததால் நான்கு ஆண்டுகளாக சிரமப்படுகிறோம். பஸ் வசதி இல்லை. சாலைகள் கரடு முரடாக உள்ளன. பல இடங்களில் தெரு மின் விளக்குகள் இல்லை. முட்புதர், மரம் வளர்ந்துள்ளதால் பள்ளி, கல்லுாரி மாணவிகள், வேலைகளுக்கு சென்று திரும்பும் பெண்கள் இரவு நேரத்தில் அச்சத்துடன் வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் போர்வேல் தண்ணீர் தினசரி கிடைத்து வந்தது. மாநகராட்சி குடிநீரும் வாரம் ஒரு முறை கிடைக்கும். இந்நிலையில் மின்வாரியத்தினர் எங்களுக்கு நீரேற்றம் செய்யும் மின் மோட்டார் இணைப்பை துண்டித்து விட்டனர். இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீரின்றி சிரமப்படுகிறோம்.
வீட்டு வசதி வாரியத்தில் இருந்து குடியிருப்பு பகுதியை மாநகராட்சி கட்டுப்பாட்டுக்கு மாற்றி இரண்டு ஆண்டாகி விட்டது. அப்போது முதல் ஒவ்வொரு முறையும் பணம் வசூலித்து மின்கட்டணம் செலுத்தி வந்தோம். இந்த மாதம், 55 ஆயிரம் ரூபாய் கட்டணம் வந்துள்ளது. தற்போது சில வீடுகளில் ஆட்கள் இல்லை.
இதனால் மின் கட்டணத்தை வசூலிக்க முடியவில்லை. இங்குள்ள அனைவரும் கூலி தொழிலாளர்கள். கல்விச்செலவு, குடும்ப செலவு அதிகரித்து விட்ட நிலையில், வீடுகளுக்கான மின்சார செலவு, எங்களுக்கு பெரிய சுமையாக உள்ளது. மின் கட்டணத்தை அரசே ஏற்று, எங்களுக்கு போர்வேல் தண்ணீரும், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில் குடிநீர் தினசரி கிடைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.