/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரம் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரம்
விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரம்
விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரம்
விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரம்
ADDED : ஜூலை 22, 2024 08:52 AM
ஈரோடு : நடப்பாண்டுக்கான விநாயகர் சதுர்த்தி, செப்., 7ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தற்போது தமிழ-கத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தொடங்கி விட்டது. இந்த வகையில் பவானியை அடுத்த வாய்க்கால் பாளையத்தில், விநாயகர் சிலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மோகன் பவனே கூறியதா-வது: ஏழு மாதங்களாக சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். தண்ணீரில் எளிதில் கரையும் வகையில், ரசாயனமில்லாத கோல மாவு, கிழங்கு மாவு, களிமண்ணால் சிலை செய்-யப்படுகிறது. தற்போது சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி நடக்கிறது. ஒரு அடி முதல் 12 அடி வரையிலான சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சிலை மட்டுமின்றி, ராமன், சீதை, ஆஞ்சநேயர் ஆகிய சிலைகளும் தயாரித்து வரு-கிறோம். இவ்வாறு கூறினார்.