Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வி.சி.,க்கள் செயற்குழு கூட்டம்

வி.சி.,க்கள் செயற்குழு கூட்டம்

வி.சி.,க்கள் செயற்குழு கூட்டம்

வி.சி.,க்கள் செயற்குழு கூட்டம்

ADDED : ஜூலை 26, 2024 02:45 AM


Google News
காங்கேயம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கேயம் நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்-முத்து கலந்து கொண்டார்.

காங்கேயம் நகராட்சி பகுதியில் திருச்செந்தில் நகர், காந்தி நகர் வீதி, கே.எஸ்.ஆர்.வீதி, பங்களா ஸ்டாப் புதுார் ரோடு பகுதி-களில் பல ஆண்டுகளாக சாலை வசதி, குடிநீர் வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை. இங்கு உடனடி-யாக அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

காங்கேயம் நகர, ஒன்றிய பகுதிகளில், 24 மணி நேரமும் சட்ட விரோத மது விற்பனை நடக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்-பன உள்பட பல்வேறு தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்-டது. தாராபுரம் சட்டசபை தொகுதி செயலாளர் சுடர்வளவன், காங்கயம் நகர பொருளாளர் வேதமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us