/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தக்காளி, சி.வெங்காயம் விலை மீண்டும் உயர்வு தக்காளி, சி.வெங்காயம் விலை மீண்டும் உயர்வு
தக்காளி, சி.வெங்காயம் விலை மீண்டும் உயர்வு
தக்காளி, சி.வெங்காயம் விலை மீண்டும் உயர்வு
தக்காளி, சி.வெங்காயம் விலை மீண்டும் உயர்வு
ADDED : ஜூன் 12, 2024 06:49 AM
ஈரோடு : ஈரோட்டில் தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
ஈரோடு வ.உ.சி., பூங்கா நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, தாளவாடியில் இருந்து அதிகளவில் தக்காளி வரத்தாகிறது. மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது கூர்த்த சீசனாக உள்ளதால், பல்வேறு பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் ஈரோடு மார்க்கெட்டுக்கு கடந்த சில தினங்களாகவே படிப்படியாக தக்காளி வரத்து குறைந்து வருகிறது. 7,௦௦௦ கிரேடு வந்த தக்காளி, 2,500 கிரேடே வரத்தாகிறது. இதனால் விலை உயர்ந்து வருகிறது. நேற்று கிலோ தக்காளி, 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்கப்பட்டது.
தினமும் படிப்படியாக தக்காளி விலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் சின்ன வெங்காயம் விலையும் கமுக்கமாக உயர்ந்து வருகிறது. சில தினங்களுக்கு முன் கிலோ, 50 ரூபாய்க்கு விற்றது, 80 ரூபாயாக அதிகரித்துள்ளது.