/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ புதுமை பெண் திட்டத்தில் உதவி பெற அரசு பள்ளி மாணவியருக்கு யோசனை புதுமை பெண் திட்டத்தில் உதவி பெற அரசு பள்ளி மாணவியருக்கு யோசனை
புதுமை பெண் திட்டத்தில் உதவி பெற அரசு பள்ளி மாணவியருக்கு யோசனை
புதுமை பெண் திட்டத்தில் உதவி பெற அரசு பள்ளி மாணவியருக்கு யோசனை
புதுமை பெண் திட்டத்தில் உதவி பெற அரசு பள்ளி மாணவியருக்கு யோசனை
ADDED : ஜூன் 12, 2024 06:50 AM
ஈரோடு : மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி புதுமை பெண் திட்டத்தில், ஆறு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவியர், இலவச கட்டாய கல்வி திட்டத்தில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் படித்து, ஒன்பது முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவியருக்கு, உயர் கல்விக்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கல்லுாரி மூலம் விண்ணப்பித்து, உயர் கல்வி படிக்க மாதம், 1,000 ரூபாய் இதுவரை வழங்கப்பட்டு வந்தது.
நடப்பு, 2024-25ம் ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறு முதல் பிளஸ் 2 வரை தமிழ்வழியில் பயின்று, உயர் கல்வி பயிலும் மாணவியருக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவியர் இருந்தாலும், உதவித்தொகை பெறலாம்.
அஞ்சல் வழி கல்வி அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள், இத்திட்டத்தில் உதவித்தொகை பெற இயலாது. வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவி பெறும் மாணவியரும் கூடுதலாக இத்திட்டத்தில் உதவித்தொகை பெற இயலும். இத்திட்டத்தை மாணவியர் பயன்படுத்திக் கொள்ள, ஈரோடு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.