ஆய்வுக்கு சென்ற தாசில்தார் முற்றுகை
ஆய்வுக்கு சென்ற தாசில்தார் முற்றுகை
ஆய்வுக்கு சென்ற தாசில்தார் முற்றுகை
ADDED : ஆக 04, 2024 01:56 AM
தாராபுரம், திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில், கனிமவள கொள்ளை நடப்பதாக கிடைத்த தகவலின்படி, கலெக்டர் உத்தரவின்படி, தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமி, அப்பகுதியில் நேற்று ஆய்வுக்கு சென்றார்.
பாறைகள் மற்றும் கிராவல் மண் எடுக்கப்பட்டது தெரிந்தது. அப்போது அங்கு வந்த சிலர், வேறெங்கும் இதுபோல் நடப்பதில்லையா? எனக்கேட்டு, வாக்குவாதம் செய்து முற்றுகையிட்டனர். தகவலறிந்து சென்ற குண்டடம் போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.