ADDED : ஜூலை 29, 2024 01:27 AM
தாராபுரம்: தாராபுரம் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணி-புரிபவர் அப்துல் மஜீத், 40; தாராபுரம் பூக்கடை கார்னர் பகு-தியில், நேற்று முன்தினம் இரவு, போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்தார்.
அப்போது சங்கர் மில் பகுதியை சேர்ந்த சூரிய-பிரசாத், 20, இடையூறு செய்தார். எச்சரித்த காவலரிடம் தகராறு செய்து, அவரை தாக்கிவிட்டு ஓட்டம் பிடித்தார். இதுகுறித்த புகாரின்படி, சூரிய பிரசாத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.