/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கைத்தறி சேலை கடையில் திருடிய 3 வாலிபர் கைது கைத்தறி சேலை கடையில் திருடிய 3 வாலிபர் கைது
கைத்தறி சேலை கடையில் திருடிய 3 வாலிபர் கைது
கைத்தறி சேலை கடையில் திருடிய 3 வாலிபர் கைது
கைத்தறி சேலை கடையில் திருடிய 3 வாலிபர் கைது
ADDED : ஜூலை 29, 2024 01:27 AM
பவானிசாகர்: பவானிசாகர் அடுத்த தொட்டம்பாளையத்தை சேர்ந்தவர் இளங்கோ. கைத்தறி பட்டு சேலை தயாரிப்பு மற்றும் விற்பனை செய்து வருகிறார். கடந்த, 2ம் தேதி இரவு கடையில் வியாபாரம் பார்த்த வகையில், 2 லட்சம் ரூபாயை வைத்து சென்றார். மறுநாள் காலை வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பணம், 18 பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது. சத்தி டி.எஸ்.பி.,சரவணன் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்-கப்பட்டு ஆசாமிகளை தேடி வந்தனர்.
இது தொடர்பாக புன்செய் புளியம்பட்டி, புங்கம்பள்ளி கார்த்தி, 31; கோவை, மாதம்பட்டி சரவணன், 35; கோவை, கணப-தியை சேர்ந்த ஹரிபிரசாத், 27, ஆகியோரை கைது செய்தனர். திருட்டுக்கு பயன்படுத்திய கார், 18 பவுன் நகை, ௧.௫௦ லட்சம் ரூபாயை மீட்டனர். சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சத்தி கிளை சிறையில் நேற்று அடைத்தனர்.