/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஓட்டி பழகியபோது குளத்தில் பாய்ந்த கார் ஓட்டி பழகியபோது குளத்தில் பாய்ந்த கார்
ஓட்டி பழகியபோது குளத்தில் பாய்ந்த கார்
ஓட்டி பழகியபோது குளத்தில் பாய்ந்த கார்
ஓட்டி பழகியபோது குளத்தில் பாய்ந்த கார்
ADDED : ஜூலை 30, 2024 03:28 AM
திருப்பூர்: திருப்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து கார் குளத்துக்குள் பாய்ந்து மூழ்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த சிறுவன் உட்பட, இருவர் தப்பினர்.திருநெல்வேலியை சேர்ந்தவர்கள் சின்னராசு, 20, ஆகாஷ், 17. இருவரும் சோமனுாரில் உள்ள உறவினர் வீட்டில் காய்கறி கடையில் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு உறவினரின் காரை ஓட்டிப்பழக எடுத்து சென்றனர்.
சாமளாபுரம் ரோட்டில் ஓட்டி சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார், அதிவேகத்தில் அங்கிருந்த குளத்துக்குள் சீறிப்பாய்ந்-தது. இதை பார்த்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் காரில் இருந்தவர்களை மீட்க உதவினர். விரைந்து மீட்ட காரணத்தால், இருவரும் உயிர்தப்பினர். மூழ்கிய காரை தீயணைப்பு வீரர்கள் கிரேன் மூலம் மீட்டனர்.