/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காரை அகற்றாமல் சாலை அமைத்த லட்சணம் அரைகுறை பணிக்கு அட்டகாச உதாரணம் காரை அகற்றாமல் சாலை அமைத்த லட்சணம் அரைகுறை பணிக்கு அட்டகாச உதாரணம்
காரை அகற்றாமல் சாலை அமைத்த லட்சணம் அரைகுறை பணிக்கு அட்டகாச உதாரணம்
காரை அகற்றாமல் சாலை அமைத்த லட்சணம் அரைகுறை பணிக்கு அட்டகாச உதாரணம்
காரை அகற்றாமல் சாலை அமைத்த லட்சணம் அரைகுறை பணிக்கு அட்டகாச உதாரணம்
ADDED : ஜூலை 30, 2024 03:29 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன்படி, 24வது வார்டுக்கு உட்பட்ட கிருஷணம்பாளையம் ஜீவா நகரில், 26ம் தேதி சாலை அமைக்கும் பணி நடந்தது. அப்பகுதியில் கார் ஒன்று நிறுத்தப்-பட்டிருந்தது. சாலை அமைக்கும் பணிக்காக வந்த ஊழியர்கள், காரின் உரிமையாளரை தேடினர். அவர் கிடைக்காததால், வேறு வழியின்றி காரை அகற்றாமல் சாலை அமைத்து சென்றனர். இதனால் அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: சாலை அமைக்கும் பணி தொடர்பாக, முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால், அந்த காரை அகற்றியிருக்கலாம். ஆனால், இரவில் சாலை அமைக்க வந்தனர். உரிமையாளர் தெரியாததால், காரை அகற்-றாமல் சாலை அமைத்து சென்றுள்ளனர். மாநகராட்சியில் பல பணிகள் இந்த லட்சணத்தில்தான் நடக்கிறது. அரசு நிர்வாகத்தை எப்படித்தான் பாராட்டுவதோ! தெரியவில்லை. இவ்வாறு மக்கள் கூறினர்.