Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தீபாவளிக்கு முன்பே வாரச்சந்தை அமைக்க வேண்டும் மாநகராட்சிக்கு ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை

தீபாவளிக்கு முன்பே வாரச்சந்தை அமைக்க வேண்டும் மாநகராட்சிக்கு ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை

தீபாவளிக்கு முன்பே வாரச்சந்தை அமைக்க வேண்டும் மாநகராட்சிக்கு ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை

தீபாவளிக்கு முன்பே வாரச்சந்தை அமைக்க வேண்டும் மாநகராட்சிக்கு ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை

ADDED : ஜூலை 30, 2024 03:29 AM


Google News
ஈரோடு: ஈரோட்டில் தீபாவளிக்கு முன் வாரச்சந்தை அமைக்க, மாநகராட்சி ஆணையாளருக்கு, ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.

தென்னிந்திய அளவில் ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு புகழ் பெற்ற ஈரோட்டில், திங்கள் மாலை முதல் செவ்வாய்கி-ழமை மாலை வரை நடக்கும் ஜவுளி வாரச்சந்தை பிரபலமானது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட வியாபாரிகள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநில வியாபாரிகள் அதிகளவு மொத்தமாக ஜவுளி கொள்-முதல் செய்வது வழக்கம்.

கனி மார்க்கெட் வளாகத்தில் ஜவுளி வாரச்சந்தை நடந்து வந்த நிலையில், புதிய வணிக வளாகம் கட்டுவதற்காக அகற்றப்பட்-டது. தற்போது காந்திஜி சாலை மற்றும் அசோகபுரத்தில் வாரச்-சந்தை நடந்து வருகிறது. இந்நிலையில் ஜவுளி வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு, கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் உள்ள காலியிடத்தில், மீண்டும் வாரச்சந்தை அமைக்க, மாநக-ராட்சி நிர்வாகத்துக்கு, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, தீபாவளி பண்டிகை தொடங்குவதற்கு முன், ஜவுளி வாரச்சந்தை அமைக்க வேண்டும் என்று, மாநகராட்சி ஆணை-யாளர் மனிஷிடம், ஜவுளி வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ஜவுளி வாரச்சந்தை அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது: தலைசிறந்த ஜவுளி சந்தைக்கு புகழ்பெற்ற ஈரோடு கனி மார்க்கெட் வாரச்சந்தை, 60 ஆண்டுக-ளாக புகழ்பெற்றது. இதன் மூலம், 720 வியாபாரிகள் பயன்-பெற்று வந்தனர். 2018ல் கனி மார்க்கெட் வணிக வளாகம் கட்டு-மான பணி தொடங்கியபோது, வாரச்சந்தை வியாபாரிகள் வெளி-யேற்றப்பட்டனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்-குறியாகியது. அப்போதிருந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், கனி மார்க்கெட் வளாக காலியிடத்தில், மீண்டும் வாரச்சந்தை அமைத்து தரப்படும் என உறுதியளித்தனர்.இதேபோல் தற்போ-தைய அரசியல்வாதிகளும் உறுதியளித்தனர்.

ஆனாலும், இது-வரை வாரச்சந்தை அமைக்கப்படவில்லை. தற்போது, காந்திஜி சாலை மற்றும் அசோகபுரத்தில் தனியார் இடத்தில் செயல்பட்டு வரும் வாரச்சந்தையால், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படு-கின்றனர். குறிப்பாக தனியாருக்கு அதிக வாடகை செலுத்த வேண்டியுள்ளது. போதிய அளவில் வியாபாரமும் நடப்ப-தில்லை.

எனவே, மாநகரத்தின் மையப்பகுதியான கனி மார்க்கெட்டில், மீண்டும் வாரச்சந்தை அமைக்கப்பட்டால், அதை நம்பியுள்ள, 720 வியாபாரிகளும் பயன் பெறுவர். இதன் மூலம் மாநகராட்-சிக்கும் உரிய வருவாய் கிடைக்கும். தீபாவளிக்கு முன்னதாக வாரச்சந்தை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us