Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பாரதியார் பல்கலையில் குளறுபடி தேர்ச்சி பெற்றும் மாணவர் தவிப்பு

பாரதியார் பல்கலையில் குளறுபடி தேர்ச்சி பெற்றும் மாணவர் தவிப்பு

பாரதியார் பல்கலையில் குளறுபடி தேர்ச்சி பெற்றும் மாணவர் தவிப்பு

பாரதியார் பல்கலையில் குளறுபடி தேர்ச்சி பெற்றும் மாணவர் தவிப்பு

ADDED : ஜூலை 19, 2024 01:42 AM


Google News
ஈரோடு: பாரதியார் பல்கலை குளறுபடியால், பி.ஏ., பொருளாதார மாண-வர்கள், அரசுப்பணி தேர்வுக்கும், உயர் கல்விக்கும் விண்ணப்-பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைகழகத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சி.என்.கல்லுாரி, வாசவி கல்லுாரி, சத்தி மற்றும் நம்பி-யூரில் அரசு கலை கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் பி.ஏ., பொரு-ளாதாரம் படிக்கும் மாணவர்கள் ஆறாவது செமஸ்டரில் கம்ப்-யூட்டர் சிஸ்டம் பிராக்டிக்கல் தேர்வெழுதினர். இரு நாட்களுக்கு முன் வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியலில், மதிப்-பெண்ணில் தேர்ச்சியாகவும், தேர்வு முடிவில் தேர்ச்சி பெற-வில்லை எனவும் பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுபற்றி மாணவர்கள் கூறியதாவது: இந்த தேர்வு, 25 மதிப்-பெண்ணுக்கு நடந்தது. 24 மதிப்பெண் பெற்ற மாணவரும் தேர்ச்சி பெறவில்லை என குறிப்பிட்டுள்ளனர். இதனால் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்-பட்டுள்ளது. குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஜூலை 19) கடைசி நாள். மதிப்பெண் சான்றிதழில் தவறாக குறிப்பிட்-டதால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் பி.எல்., படிப்புக்கு விண்ணப்பிக்க வரும், 24ம் தேதி கடைசி நாள். இதற்கும் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்-பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும், 200 மாணவ, மாண-வியர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற மாவட்ட மாணவர்களும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதுபற்றி பல்கலை தேர்வு கட்டுப்-பாட்டு பிரிவில் தகவல் தெரிவித்தபோது, 20 நாட்களில் தவறு சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். பல்கலை கழகத்தின் தவறால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இவ்வாறு மாணவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us