Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கால்நடை அவசர சிகிச்சை ஊர்தியில் 500 அழைப்புக்கு தீர்வு

கால்நடை அவசர சிகிச்சை ஊர்தியில் 500 அழைப்புக்கு தீர்வு

கால்நடை அவசர சிகிச்சை ஊர்தியில் 500 அழைப்புக்கு தீர்வு

கால்நடை அவசர சிகிச்சை ஊர்தியில் 500 அழைப்புக்கு தீர்வு

ADDED : ஜூலை 07, 2024 03:02 AM


Google News
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் அரசு சார்பில், கால்நடை மண்டல இணை இயக்குனர் அலுவலகங்களுக்கு, கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஈரோடு மண்டல இணை இயக்குனர் பழனிவேல் கூறியதாவது:

மருத்துவமனைக்கு அழைத்து வர முடியாத கால்நடைகளை, 1962 என்ற கட்டணம் இல்லாத அழைப்புக்கு அழைத்தால், தேவை அடிப்படையில் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். ஒருவேளை நேரில் சென்று பார்த்து மருந்து வழங்க வேண்டுமெனில், இந்த அவசர ஊர்தியில் சென்று, சிகிச்சை வழங்கப்படும். நடப்பாண்டு வழங்கப்பட்ட இந்த ஊர்தி மூலமான சிகிச்சை தேவை என இதுவரை, 500 அழைப்பு வந்தது. இதில், 150 அழைப்புகளுக்கு டாக்டர்கள் குழு சென்று, ஆய்வு செய்து மருந்து வழங்கினர். இந்த அவசர ஊர்தியில், கால்நடைகளுக்கு தேவையான அனைத்து வகை மருத்துவ உபகரணங்களும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us