/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குறை மாத இரட்டை குழந்தைகள் சிகிச்சைக்கு உதவ வேண்டுகோள் குறை மாத இரட்டை குழந்தைகள் சிகிச்சைக்கு உதவ வேண்டுகோள்
குறை மாத இரட்டை குழந்தைகள் சிகிச்சைக்கு உதவ வேண்டுகோள்
குறை மாத இரட்டை குழந்தைகள் சிகிச்சைக்கு உதவ வேண்டுகோள்
குறை மாத இரட்டை குழந்தைகள் சிகிச்சைக்கு உதவ வேண்டுகோள்
ADDED : ஜூலை 08, 2024 06:52 AM
ஈரோடு: ஈரோட்டை சேர்ந்த வி.ஆனந்த் - ஏ.நந்தினி தம்பதிக்கு, கடந்த, 19ல் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அவை குறை மாதத்தில், 28 வாரம், 4 நாட்களில் பிறந்தன.
அதில் ஒரு குழந்தை, 1 கிலோவும், மற்றொரு குழந்தை, 850 கிராம் எடையும் இருந்தன.
அந்த குழந்தைகளுக்கு சுவாச பிரச்னையும் இருக்கிறது. ஈரோடு, பெஸ்ட் சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிட்டல் டாக்டர் எஸ்.கதிர்வேல், தொடர் சிகிச்சை வழங்கி வருகிறார்.
இதுபற்றி டாக்டர் கூறியதாவது:
குறை மாதத்தில், குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளுக்கு செயற்கை சுவாச உதவி வழங்கப்படுகிறது. ஐ.வி., மூலம் உணவு தரப்படுகிறது. நுரையீரல் சீராக செயல்பட தனியாக மருந்துகள் வழங்கப்படுகின்றன.
குறிப்பிட்ட வாரங்களுக்கு இவர்களுக்கு அனைத்து வகையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கி, அவர்களது உணவு, சுவாசம் உள்ளிட்ட செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும்.
அக்குழந்தைகள், தாய் பராமரிப்புக்கு குழந்தைகள் வர இன்னும், 4 முதல், 6 வாரங்களுக்கு மேலாகும். இதற்கு, 9 முதல், 10 லட்சம் ரூபாய் வரை மருத்துவ செலவாகும்.
இவ்வாறு கூறினார்.
ஆனந்த் - நந்தினி தம்பதி, தனியார் நிறுவன பணியுடன், ஏழ்மையான நிலையில் உள்ளதால், மருத்துவ செலவுகளை மேற்கொள்ள இயலாத நிலையில் உள்ளனர்.
அவர்கள் தங்கள் குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ முன்வரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களுக்கு உதவ முன்வருவோர், 63831 68361 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.