/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ உங்களை தேடி... உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு உங்களை தேடி... உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு
உங்களை தேடி... உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு
உங்களை தேடி... உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு
உங்களை தேடி... உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு
ADDED : ஜூலை 19, 2024 01:37 AM
ஈரோடு: ஈரோடு யூனியனுக்கு உட்பட்ட பகுதியில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், பல்வேறு அலுவலகங்களில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.
அரசு துறைகளை, கிராமங்களுக்கே அழைத்து சென்று கலெக்டர் தலைமையில் ஒவ்வொரு மாதமும், ஒரு கிராமத்தில் தங்கி, தடையின்றி அரசு திட்டங்கள் செல்கிறதா என்பதை, கள ஆய்வு செய்யப்படுகிறது.
இதன்படி ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு மோகன் தோட்டத்தில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நேற்று ஆய்வு செய்தார். மாநகராட்சியின், 52 வார்டுகளில் இருந்து பெறப்படும் வீட்டு உபயோக கழிவு நீரை சுத்திகரிப்பு செய்வதை பார்வையிட்டார். தினமும், 50.54 எம்.எல்.டி., அளவு தண்ணீர் சுத்திகரிப்பு செய்யும் முறைகளை கேட்டறிந்தார். பின், ஈரோடு ஸ்டேட் பாங்க் கிளை சாலையில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், கிளை சிறை, யூனியன் அலுவலகம், அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
பின், நசியனுார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு செய்து, மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின், ஈரோடு அரசு பல் நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனைக்கு வந்து, அங்குள்ள சிகிச்சை முறை, சுகாதாரம், சிகிச்சை வழங்கும் அறை, இயன்முறை சிகிச்சை, அவசர சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு போன்றவற்றை பார்வையிட்டு, விபரங்களை சேகரித்தார்.
எஸ்.பி., ஜவகர், பயிற்சி உதவி கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) அம்பிகா, பி.டி.ஓ., நடராஜ், மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், உதவி பொறி-யாளர் சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
சிறையிலும் ஆய்வு...
உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தில், ஈரோடு மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று ஆய்வு செய்தார். அவரை எஸ்.பி., ஜவகர் வரவேற்றார். பின்னர் ஈரோடு கிளை சிறைக்கு சென்றார். கைதிகளிடம் விசாரித்தார். 30 நாட்களுக்கு மேல் கைதிகள் உள்ளனரா? ஜாமின் தொகை செலுத்த வழியின்றி யாரேனும் உள்ளனரா? என்பது குறித்து விசாரித்தார். சிறையிலிருந்து கழிவு நீர் சரிவர வெளியேறுவது இல்லை. அதை சரி செய்து தருமாறு கலெக்டரிடம் வேண்-டுகோள் விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
மாநகராட்சி பள்ளியில்...
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்படி, மாவட்ட பிற்ப-டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தர்-மராஜ், ஈரோடு எஸ்.கே.சி., சாலை மாநகராட்சி நடுநிலை பள்-ளியில் நேற்று ஆய்வு செய்தார். காலை உணவு, சத்துணவு பற்றிய விவரங்கள், அங்கன்வாடி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு விபரங்கள் குறித்து ஆய்வு செய்தார். எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளிடம் மரம் வளர்ப்பதால் என்ன பயன்? என்-பது உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார்.