சென்னிமலை நகரில் தொட்டி கட்ட பூஜை
சென்னிமலை நகரில் தொட்டி கட்ட பூஜை
சென்னிமலை நகரில் தொட்டி கட்ட பூஜை
ADDED : ஜூலை 26, 2024 02:44 AM
சென்னிமலை: சென்னிமலை பேரூராட்சி, 13வது வார்டுக்கு உட்பட்ட உப்பி-லிபாளையம் ரோடு, காமராஜ் நகர், பள்ளிக்கூடம் அருகில், காங்கேயம் எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான சாமிநாதன் தொகுதி மேம்பாட்டு நிதியில், 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி நேற்று நடந்தது.
பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் பூஜை நடத்தி பணியை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் சவுந்தர்ராஜன், வார்டு கவுன்சிலர் ஜெயமணி, தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.