வழக்கு ரத்து கோரி அமைச்சரிடம் மனு
வழக்கு ரத்து கோரி அமைச்சரிடம் மனு
வழக்கு ரத்து கோரி அமைச்சரிடம் மனு
ADDED : ஜூலை 19, 2024 01:46 AM
பெருந்துறை: பெருந்துறை அருகே மேட்டுக்கடையில், ஒரு நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்க வந்த அமைச்சர் முத்துசாமியிடம், பெருந்துறை சிப்-காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க நிர்வாகிகள் சந்தித்து, மனு கொடுத்தனர்.
அதில், 'பெருந்துறை மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில், உள்ளிருப்பு போராட்டம் நடத்திய, 42 பேர் மீது போடப்பட்-டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். மாதந்தோறும், 5ம் தேதி அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த பரிசீலிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியதாக, ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி
தெரிவித்தார்.