/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் 2,000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் 2,000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி
ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் 2,000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி
ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் 2,000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி
ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் 2,000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி
ADDED : ஜூலை 19, 2024 01:46 AM
ஈரோடு: ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில், முதுமக்கள் தாழிகள் சிறப்பு கண்காட்சி நேற்று தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்ட அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழிகள் குறித்து, புகைப்படங்கள் விளக்கத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்-ளன.
இதில் ஈரோடு மாவட்டத்தில் பெத்தம்பாளையம், அய்யம்பள்ளி, சோலார், அந்தியூர் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் சோலாரில் கண்-டெடுக்கப்பட்டுள்ள, 2,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழியும் ஒன்று. வரும், 31ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது.
இதுகுறித்து காப்பாட்சியர் ஜென்சி கூறியதாவது: தமிழகத்தில் முதுமக்கள் தாழி பல்வேறு அளவுகளில் கண்டெடுக்கப்பட்டுள்-ளது. பெருங்கற் காலமான கி.பி.300 ஆண்டுகளில், இறந்தவர்-களின் உடலை பெரிய பானைக்குள் வைத்து, மண்ணுக்குள் அடக்கம் செய்தனர். இந்த பானைகளே முதுமக்கள் தாழி எனப்-பட்டது. ஆற்று சமவெளிப்பகுதிகளில் இம்முறை பரவலாக பின்-பற்றப்பட்டு வந்தாக ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வாறு கூறினார்.