/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆடிட்டர் வீட்டு திருட்டில் மேலும் ஒருவர் கைது ஆடிட்டர் வீட்டு திருட்டில் மேலும் ஒருவர் கைது
ஆடிட்டர் வீட்டு திருட்டில் மேலும் ஒருவர் கைது
ஆடிட்டர் வீட்டு திருட்டில் மேலும் ஒருவர் கைது
ஆடிட்டர் வீட்டு திருட்டில் மேலும் ஒருவர் கைது
ADDED : ஜூலை 29, 2024 01:26 AM
ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி, என்.ஜி.ஜி.ஓ.காலனி ஏழாவது வீதியை சேர்ந்த ஆடிட்டர் சுப்பிரமணி, 69; இவரது வீட்டில், 235 பவுன் நகை, 48 லட்சம் ரூபாய் திருட்டு போனது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சூரம்பட்டி போலீசார், ஏற்கனவே நான்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார், 26 லட்சம் ரொக்கம், 132 பவுன் நகைகளை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் திருட்டு தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த வினு சக்ரவர்த்தி, 35, என்பவரை கைது செய்-தனர். அவரிடம் இருந்து, 50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
திருட்டு வழக்கில் சிறை சென்றபோது, ஆடிட்டர் வீட்டு திருட்டு வழக்கின் முக்கிய குற்றவாளியான நாராயண ரெட்டியுடன் பழக்கம் ஏற்பட்டது. அதனடிப்படையில் இருவரும் திருட்டு-களில் ஈடுபட்டுள்ளனர். வினு சக்ரவர்த்தி, தங்கத்தை உருக்கி மாற்றம் செய்து விற்பதில் கைதேர்ந்தவர் என போலீசார்
தெரிவித்தனர்.