Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் தொல்லை

தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் தொல்லை

தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் தொல்லை

தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் தொல்லை

ADDED : ஜூன் 16, 2024 06:20 AM


Google News
ஈரோடு : ஈரோடு, அரசு மருத்துவமனையில் தேவையான அளவு பார்க்கிங் வசதி இல்லாததால், வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.

ஈரோடு அரசு மருத்துவமனை, 10க்கும் மேற்பட்ட தனி பிளாக்குகளில் செயல்படுகிறது. அவற்றுக்கு மேலாக சமீபத்தில், 56 கோடி ரூபாயில் வளாகத்தின் பின்புறம், பல்நோக்கு மருத்துவமனை கட்டடம் கட்டி, செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால், இவ்வளவு பெரிய வளாகத்தில் நுழைவு வாயிலின் பிள்ளையார் கோவில் அருகே, ஒரே ஒரு சிறிய டூவீலர் பார்க்கிங் மட்டுமே உள்ளது. இங்கு வரும் டாக்டர்கள், நர்ஸ் உள்ளிட்ட பிற அலுவலர்கள், பல்வேறு காரணத்துக்காக இங்கு வரும் நோயாளிகள், பொதுமக்களின் கார் உள்ளிட்ட வாகனங்கள், டூவீலர் போன்றவை நிறுத்த

இடவசதி இல்லை.

இதனால் டூவீலர் நிறுத்தத்தின் வெளிப்புறம், பழைய இணை இயக்குனர் அலுவலக கட்டட பகுதி, அவசர சிகிச்சை பிரிவை சுற்றிலும், அரசு மருத்துமவனைக்கான போலீஸ் ஸ்டேஷன் பகுதி, தவிர, அனைத்து பிளாக்கிலும் முன்பகுதியிலும் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், ஆம்புலன்ஸ், தனி நபர்களின் வாகனங்களில் நோயாளிகளை ஏற்றி வந்தாலும், வேகமாக உள்ளே வரவும், குறிப்பிட்ட பிளாக்குக்கு செல்லவும், ஓரமாக நிறுத்தி நோயாளிகளை ஏற்றி, இறக்கவும் முடியாமல் சிரமப்படுகின்றனர்.இந்த மாவட்ட அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் வளாகத்தை நேரில் ஆய்வு செய்து, கார் உள்ளிட்ட வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், டூவீலர்கள், மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள், பிற பணியாளர்களின் வாகனம் என தனித்தனியாக நிறுத்த வசதி செய்து தர வேண்டும். குறிப்பாக வாகனங்கள், பொதுமக்கள், நோயாளிகள் வந்து செல்லும் வழியில் நிறுத்த அனுமதிக்கக்கூடாது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us