/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஒற்றை யானை தாக்கி இளம் விவசாயி உயிரிழப்பு ஒற்றை யானை தாக்கி இளம் விவசாயி உயிரிழப்பு
ஒற்றை யானை தாக்கி இளம் விவசாயி உயிரிழப்பு
ஒற்றை யானை தாக்கி இளம் விவசாயி உயிரிழப்பு
ஒற்றை யானை தாக்கி இளம் விவசாயி உயிரிழப்பு
ADDED : ஜூன் 15, 2024 11:37 PM
புன்செய்புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே சுஜ்ஜல்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், 25; இவருக்கு சொந்தமான தோட்டம், அதே பகுதியில் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. நேற்று முன்தினம் இரவு, வெங்கடாசலம் தோட்டத்தில் காவல் பணியில் இருந்தார். அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, விவசாய நிலத்தில் புகுந்து தர்பூசணி பயிர்களை சேதம் செய்தது.
சத்தம் கேட்டு வந்த வெங்கடாசலம், யானையை விரட்ட முயற்சித்த போது, ஆவேசமடைந்த யானை, அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த மற்ற விவசாயிகள், பவானிசாகர் வனத்துறை, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சடலத்தை மீட்ட பவானிசாகர் போலீசார், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வனத்துறையினர் விசாரிக்கின்றனர். ஒற்றை யானை தாக்கி விவசாயி உயிரிழந்தது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.