Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குட்டையில் தேங்கிய தண்ணீரை குடிக்கும் மலைகிராம மக்கள்

குட்டையில் தேங்கிய தண்ணீரை குடிக்கும் மலைகிராம மக்கள்

குட்டையில் தேங்கிய தண்ணீரை குடிக்கும் மலைகிராம மக்கள்

குட்டையில் தேங்கிய தண்ணீரை குடிக்கும் மலைகிராம மக்கள்

ADDED : ஜூலை 18, 2024 01:55 AM


Google News
சத்தியமங்கலம்: ஆசனுார் அருகே

மின்சாரம் இல்லாததால், மலைகிராம மக்கள் குட்டை நீரை குடிக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலமலை ஊராட்சியில் மாவநத்தம், பெஜலட்டி,தடசலட்டி, இட்டரை, காளிதிம்பம் உள்-ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் நேற்று முன்-தினம் மின்சாரம் தடை ஏற்பட்டது. இதுவரை மின்சாரம் வரவே இல்லை. மின்சாரம் இல்லாமல் மலைகிராம மக்கள் கடும் அவதி பட்டு வருகின்றனர்.

ஊராட்சிக்கு சொந்தமான மின் மோட்டார்களை இயக்க முடியா-ததால் அருகில் உள்ள குட்டை மற்றும் ஆங்காங்கே பள்ளத்தில் தேங்கியுள்ள நீரை எடுத்து குடித்து வருகின்றனர்.

இதனால், வாந்தி,

வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. மக்களுக்கு சுகாதா-ரமான குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us