/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குருநாதசுவாமி கோவில் ஆடி தேர் திருவிழா பூச்சாட்டுடன் துவக்கம் குருநாதசுவாமி கோவில் ஆடி தேர் திருவிழா பூச்சாட்டுடன் துவக்கம்
குருநாதசுவாமி கோவில் ஆடி தேர் திருவிழா பூச்சாட்டுடன் துவக்கம்
குருநாதசுவாமி கோவில் ஆடி தேர் திருவிழா பூச்சாட்டுடன் துவக்கம்
குருநாதசுவாமி கோவில் ஆடி தேர் திருவிழா பூச்சாட்டுடன் துவக்கம்
ADDED : ஜூலை 18, 2024 01:55 AM
அந்தியூர்: அந்தியூர், புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசுவாமி கோவில் ஆடி தேர் திருவிழா, கால்நடை சந்தை, பெழுதுபோக்கு அம்-சங்கள் அடங்கிய நிகழ்ச்சி ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். நேற்று காலை குருநாதசு-வாமி கோவில் வளாகத்தில் தேர்திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
அந்தியூர், புதுப்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். வரும், 24 ல் கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், 31 ல், முதல் வன பூஜையும், அடுத்த மாதம், 7ம் தேதி ஆடி பெருந்தேர் திருவிழா துவங்குகிறது. அடுத்த மாதம், 8, 9, 10 ஆகிய நாட்களில், கால்ந-டைசந்தைகளும், பொழுதுபோக்கு அம்சங்களுடன் பண்டிகை நடக்க உள்ளது.