ADDED : ஜூன் 19, 2024 02:01 AM
ஈரோடு, ஈரோடு, சூரம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் நகர கமிட்டி உறுப்பினர் ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் ரகுராமன், நகர செயலாளர் சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, விஜயராகவன், கோமதி பேசினர். ஜாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்ததால், திருநெல்வேலியில் மா.கம்யூ., அலுவலகம் சூறையாடப்பட்டது. கட்சி நிர்வாகிகளும் தாக்கப்பட்டனர். இந்த வன்முறை செயலில் ஈடுபட்டவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் செய்து கைது செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.