கண்டக்டரை மிரட்டிய 'போதை' இளசு கைது
கண்டக்டரை மிரட்டிய 'போதை' இளசு கைது
கண்டக்டரை மிரட்டிய 'போதை' இளசு கைது
ADDED : ஜூன் 19, 2024 02:01 AM
பெருந்துறை, சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி, சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், 48; அரசு போக்குவரத்து கழக ஈரோடு-1 கிளை நடத்துனர்.
சென்னிமலையிலிருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் பஸ்சில் நேற்று முன்தினம் பணியில் இருந்தார். பெருந்துறை ஆர்.எஸ்.கொடசிட்டாம்பாளையத்தில், குடிபோதையில் ஏறிய ஒரு பயணி, படிக்கட்டில் நின்று மொபைல்போனில் பேசிய படி வந்துள்ளார். உள்ளே செல்லுமாறு குணசேகரன் அறிவுறுத்தியதால், தகாத வார்த்தை பேசியபடி, சாலபாளையத்தில் இறங்கி கொண்டார். பஸ் திரும்ப சாலபாளையம் வந்தபோது, போதை ஆசாமி அரிவாளுடன் பஸ்சில் ஏறி கண்டக்டரை மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து பெருந்துறை போலீசில், குணசேகரன் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில், மிரட்டல் விடுத்த ஆசாமி, சாலபாளையம் மேட்டை சேர்ந்த கணேசன் மகன் மணி, 24, என்பது தெரிந்தது. மணியை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.