ADDED : ஜூன் 28, 2024 01:51 AM
சத்தியமங்கலம், தமிழக ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கத்தின் சார்பில், கெம்பேகவுடரின் பிறந்தநாள் விழா, சத்தியமங்கலத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
மாவட்ட தலைவர் குப்புராஜ் தலைமை வகித்தார். அவர் உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செய்து, இனிப்பு வழங்கினர். இதை தொடர்ந்து கோம்புபள்ளத்தில், சங்க கொடியை மாநில தலைவர் வெள்ளியங்கிரி ஏற்றி வைத்தார். இதன் பிறகு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பண்ணாரியில் ஒன்பது மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளும் குடும்ப விழா, பொதுக்குழு, முப்பெரும் விழாவை, ஆக.,11ம் தேதி நடத்த தீர்மானம் நிறைவேற்றினர்.