ADDED : ஜூன் 28, 2024 01:51 AM
பவானி, மத்திய அரசு கொண்டுவந்த முப்பெரும் குற்றவியல் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி, பவானி வழக்கறிஞர் சங்கம் சார்பில், பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் குமரேசன், செயலாளர் குமரேசன், துணை செயலாளர் செங்கோட்டுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜூலை, 1ம் தேதி அமல்படுத்தவுள்ள சட்டத் திருத்தங்களை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.