/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி அரசின் அப்பட்ட கண்துடைப்பு என குற்றச்சாட்டு நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி அரசின் அப்பட்ட கண்துடைப்பு என குற்றச்சாட்டு
நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி அரசின் அப்பட்ட கண்துடைப்பு என குற்றச்சாட்டு
நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி அரசின் அப்பட்ட கண்துடைப்பு என குற்றச்சாட்டு
நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி அரசின் அப்பட்ட கண்துடைப்பு என குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 14, 2024 01:24 AM
ஈரோடு, ''தமிழகத்தில் குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்து கொள்ளலாம் என்ற முதல்வரின் அறிவிப்பு கண் துடைப்பு,'' என, கொடிவேரி அணை, பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி தளபதி தெரிவித்தார்.
நீர் தேக்கங்கள், ஏரி, குளம், கண்மாய்களில் விவசாயம், பானை தொழில் செய்ய கட்டணமின்றி மண் எடுக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார்.
இதுபற்றி, கொடிவேரி அணை, பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி தளபதி கூறியதாவது:
குடிமராமத்து திட்டம் மூலம் பொதுப்பணித்துறை, வனத்துறை, உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள நீர் நிலைகளில் விவசாயிகள், பானை தொழிலாளர், தேவையான வண்டல் மண் உட்பட மண் எடுக்கலாம் என அறிவிக்கிறது. ஒரு விவசாயி, நஞ்சை நிலமாக இருந்தால், 15 யூனிட் வண்டல் மண்ணும், புஞ்சை நிலமாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு, 10 யூனிட் வண்டல் மண்ணும் எடுக்கலாம் என விதிமுறை கூறுகிறது.
நடைமுறையில் கடந்த மூன்றாண்டாக, தி.மு.க., ஆட்சியில் அறிவிப்பு ஒரு விதமாகவும், நடைமுறை வேறு விதமாகவும் உள்ளது. பொதுப்பணி, உள்ளாட்சி, வனத்துறை நிர்வாகத்தில் உள்ள நீர் நிலைகளில், 'வண்டல் மண் குறைவாகத்தான் உள்ளது' என அரசிடம் அறிக்கை தருகின்றனர். இதனால், 90 சதவீத நீர் நிலைகளில் மிக குறைந்த யூனிட் மட்டுமே மண் எடுக்க அனுமதிக்கின்றனர்.
மணல் பினாமிகளுக்கு, ஒவ்வொரு மூன்று யூனிட்டுக்கும் குறைந்தபட்சம், 500 ரூபாய் முதல், 1,000 ரூபாய் கப்பம் கட்ட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த வசூலுக்கு ஆட்களை நியமித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் அனுமதி கடிதம் கொடுத்தாலும், இவர்கள் அனுமதியின்றி ஒரு யூனிட் வண்டல் மண்ணைக்கூட விவசாயிகள் எடுக்க முடியாது. தவிர மண் எடுக்க தேவையான இயந்திரங்களை, உள்ளூர் கட்சிக்காரர்களின் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவர்கள் சொல்லும் அதிகபட்ச வாடகையை தர வேண்டும்.
கடந்த மூன்றாண்டில் முதல்வரும், ஈரோடு மாவட்ட நிர்வாகமும் இதுபோன்று அறிவிப்பு செய்கிறது. ஆனால், 100 யூனிட்டுக்கு மேல் எங்கும் வண்டல் மண் எடுக்கப்படவில்லை.
இதுபோன்ற வெற்று அறிவிப்பை அரசு நிறுத்திவிட்டு, விவசாயிகளுக்கு உதவும் வகையில் சமூக விரோதிகளை வெளியேற்ற வேண்டும். உள்ளூர் ஆளும் கட்சி, அரசியல்வாதிகளையும் தலையிட அனுமதிக்கக்கூடாது. கடந்த மூன்று மாதங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த பயனாளிகளுக்கு, எவ்வளவு யூனிட் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக பெறப்பட்ட கட்டணத்தொகை எவ்வளவு என்பதை அந்தந்த மாவட்ட கலெக்டர், அமைச்சர்கள் பட்டியலை வெளி
யிடட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.