Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சுப்புலட்சுமி வீட்டில் திருடிய சிறுவர்களை பிடிக்க தீவிரம்

சுப்புலட்சுமி வீட்டில் திருடிய சிறுவர்களை பிடிக்க தீவிரம்

சுப்புலட்சுமி வீட்டில் திருடிய சிறுவர்களை பிடிக்க தீவிரம்

சுப்புலட்சுமி வீட்டில் திருடிய சிறுவர்களை பிடிக்க தீவிரம்

ADDED : ஜூலை 08, 2024 11:53 PM


Google News
மலையம்பாளையம் : ஈரோடு அருகே மாணிக்கம்பாளையம், வி.ஐ.பி., நகரில் கணவர் ஜெகதீசனுடன் வசிப்பவர் சுப்புலட்சுமி, 72, தி.மு.க., முன்னாள் மத்திய, மாநில அமைச்சர். துணை பொது செயலராக இருந்து, தற்போது கட்சியில் இருந்து ஒதுங்கியுள்ளார். இவரின், 25 ஏக்கர் பண்ணை வீடு, மொடக்குறிச்சி அருகே புன்செய்காளமங்கலம், சின்னம்மாபுரம் மினி காட்டில் உள்ளது.

கடந்த, 23ம் தேதி பண்ணை வீட்டின் கதவை உடைத்து, 50,000 ரூபாய் திருடு போனது. மலையம்பாளையம் போலீசார் விசாரித்து, சிறுவர்கள் திருட்டில் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்து உள்ளனர்.

இதுபற்றி போலீசார் கூறியதாவது: பண்ணை வீட்டுக்குள், 16 வயது சிறுவன் வந்து சென்ற, 'சிசிடிவி' காட்சி கிடைத்துள்ளது. சிறுவன் தனியாக வந்திருக்க வாய்ப்பில்லை. அவனுடன் மேலும் சிலர் வந்திருக்க கூடும் என நம்புகிறோம். சிறுவர்கள் தண்டவாளத்தை ஒட்டிய வீடுகளில், கைவரிசை காட்டுவதை வாடிக்கையாக கொண்டவர்கள். இவர்கள் நிலையான இடத்தில் தங்காதவர்கள். சிறுவன் உள்ளிட்ட கும்பலை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us