/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கீழ்பவானி சீரமைப்பு பணியை முடித்து 3 பாசனத்துக்கும் நீர் திறக்க வலியுறுத்தல் கீழ்பவானி சீரமைப்பு பணியை முடித்து 3 பாசனத்துக்கும் நீர் திறக்க வலியுறுத்தல்
கீழ்பவானி சீரமைப்பு பணியை முடித்து 3 பாசனத்துக்கும் நீர் திறக்க வலியுறுத்தல்
கீழ்பவானி சீரமைப்பு பணியை முடித்து 3 பாசனத்துக்கும் நீர் திறக்க வலியுறுத்தல்
கீழ்பவானி சீரமைப்பு பணியை முடித்து 3 பாசனத்துக்கும் நீர் திறக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 08, 2024 05:22 PM
ஈரோடு:
கீழ்பவானி கால்வாய் பாசன திட்டத்தில் நீதிமன்ற தடையை நீக்கி, பணியை முடித்து, 3 பாசனங்களுக்கும் ஒரே நேரத்தில் நீர் திறக்க, ஈரோடு, நீர் வளத்துறை பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் குருமூர்த்தியிடம், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் மனு வழங்கினர்.
மனுவில் கூறியதாவது:
கீழ்பவானி கால்வாய் பிரதான திட்ட விவசாயிகளின் கோரிக்கைப்படி, விவசாயம், சுற்றுச்சூழல், குடிநீர் பாதிக்காமல் அரசாணை, 276ஐ மாற்றி, அரசாணை, 60ஐ அரசு வெளியிட்டது. இதற்கு தடையாணை பெறப்பட்டு, சீரமைப்பு பணி பாதியில் நிற்கிறது. இதனால் நன்செய் பாசனம் தாமதமாகி, புன்செய் பாசனத்துக்கு முழுமையாக தண்ணீர் வழங்காமல் பயிர் பாதித்தது. தற்போது நன்செய் பாசனத்துக்கான தண்ணீர் உரிமையை கீழ்பவானி விவசாயிகள் இழக்க நேரிடும் நிலை உள்ளது.
எனவே, நீதிமன்ற தடையாணையை விலக்கி, சீரமைப்பு பணியை துரிதப்படுத்தி, நன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். பவானிசாகர் அணை மூலம் பாசனம் பெறும், 3 பாசன திட்டங்களுக்கும் ஒரே அரசாணையில் சம காலங்களில் தண்ணீர் திறக்க வேண்டும். அரசாணை-60ன்படி சீரமைப்பு பணி வரும், 11ல் துவங்காவிட்டால், நன்செய் பாசன உரிமையை இழக்க நேரிடும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.