Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நீலகிரி மலை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பவானிசாகர் அணை நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

நீலகிரி மலை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பவானிசாகர் அணை நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

நீலகிரி மலை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பவானிசாகர் அணை நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

நீலகிரி மலை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பவானிசாகர் அணை நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

ADDED : ஜூலை 17, 2024 06:47 PM


Google News
புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம் ஒரே நாளில்,4 அடி உயர்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்து, இரு நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அந்த உபரி நீரானது பவானிசாகர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் அணை நீர்வரத்து, 20,481 கன அடியாக இருந்த நிலையில் நேற்று மதியம், 24,000 கன அடியாகவும் இருந்தது. அதேசமயம் நேற்று முன்தினம், 71.46 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 75.79 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் அணை நீர்மட்டம், 4 அடி உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில், 1,100 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில், 5 கன அடி தண்ணீரும் என மொத்தம், 1,105 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் வேகமாக உயரும் என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us