/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஞாயிற்றுக்கிழமை வந்தால் ஆடு வளர்ப்போர் அச்சம் ஞாயிற்றுக்கிழமை வந்தால் ஆடு வளர்ப்போர் அச்சம்
ஞாயிற்றுக்கிழமை வந்தால் ஆடு வளர்ப்போர் அச்சம்
ஞாயிற்றுக்கிழமை வந்தால் ஆடு வளர்ப்போர் அச்சம்
ஞாயிற்றுக்கிழமை வந்தால் ஆடு வளர்ப்போர் அச்சம்
ADDED : ஜூன் 24, 2024 02:56 AM
மொடக்குறிச்சி;மொடக்குறிச்சியை அடுத்த கரியாகவுண்டன் வலசை சேர்ந்தவர் வடிவேல், 65, சரவணன், 50; இருவரும் தோட்டத்தில் ஆடுகள் வளர்க்கின்றனர். இதில் ஆறு ஆடுகளை நேற்று அதிகாலை காணவில்லை. அவற்றின் மதிப்பு,
80 ஆயிரம் ரூபாய்.
இதுகுறித்து இருவரும் மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்துள்ளனர். சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு அதிகாலை வரை மொடக்குறிச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், ஆடுகள் திருட்டு போவது சமீபத்தில் வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து போலீசிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆடு வளர்க்கும் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.