ADDED : ஜூன் 24, 2024 02:55 AM
ஈரோடு;ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரு சில இடங்களில் மழை பெய்தது.
இதில் அதிகபட்சமாக கோபியில், 12.20 மி.மீ., மழை பெய்தது. எலந்தகுட்டை மேட்டில், 1 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் வேறெங்கும் மழை பொழிவு இல்லை. அதேசமயம் நேற்று வழக்கம்போல் பகலில் வெயில் சுட்டெரிக்க, மக்கள் அவதிக்கு ஆளாகினர். பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கினர்.