/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாயாற்றில் வெள்ளப்பெருக்கு வாகனங்கள் செல்ல தடை மாயாற்றில் வெள்ளப்பெருக்கு வாகனங்கள் செல்ல தடை
மாயாற்றில் வெள்ளப்பெருக்கு வாகனங்கள் செல்ல தடை
மாயாற்றில் வெள்ளப்பெருக்கு வாகனங்கள் செல்ல தடை
மாயாற்றில் வெள்ளப்பெருக்கு வாகனங்கள் செல்ல தடை
ADDED : ஜூலை 17, 2024 09:24 PM
புன்செய்புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ள வன கிராமங்களில், 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள இக்கிராம மக்கள், மாயாற்றில் நீர் குறைவாக செல்லும் சமயங்களில் நடந்தே ஆற்றை கடந்து செல்கின்றனர். வெள்ளப்பெருக்கு காலங்களில் வாகனம் மற்றும் பரிசலில் பயணிக்கின்றனர்.
கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் கன மழை பெய்வதால், மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து, 21,383 கன அடியாக அதிகரித்துள்ளதால், மாயாற்றில் மழை நீர் செந்நிறத்தில் பெருக்கெடுத்து செல்கிறது.
ஆனாலும், வன கிராம மக்கள் ஆபத்தான முறையில் பரிசலில் ஆற்றைக் கடந்து செல்கின்றனர். மாயாற்றில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், தெங்குமரஹாடா, கல்லம்பாளையம், அல்லிமாயாறு, சித்திரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மாயாற்றில் வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல வனத்துறையினர் தடை விடுத்துள்ளனர்.