/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈமு, கோழி, ஆடு வளர்ப்பு நிறுவன சொத்து 22ல் ஏலம் ஈமு, கோழி, ஆடு வளர்ப்பு நிறுவன சொத்து 22ல் ஏலம்
ஈமு, கோழி, ஆடு வளர்ப்பு நிறுவன சொத்து 22ல் ஏலம்
ஈமு, கோழி, ஆடு வளர்ப்பு நிறுவன சொத்து 22ல் ஏலம்
ஈமு, கோழி, ஆடு வளர்ப்பு நிறுவன சொத்து 22ல் ஏலம்
ADDED : ஜூலை 12, 2024 01:44 AM
ஈரோடு, கோவை டான்பிட் சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி, நந்து கோப்ரா பவுல்ட்ரிஸ் அண்ட் கேட்டில் பார்ம்ஸ் நிறுவன அசையா சொத்துக்கள் வரும், 22ம் தேதி மதியம், 3:00 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமையில் நடக்கும் ஏலத்தில், www.erode.tn.nic.inல் நிபந்தனைகளை அறிந்து விண்ணப்பிக்கலாம். இதேபோல் சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவனம், கொங்கு நாடு ஈமு அண்டு பவுல்ட்ரி பார்ம்ஸ் பி.லிட்., நிறுவன அசையா சொத்துக்களும் ஏலம் விடப்படுகிறது.
விருப்பம் உள்ளவர்கள், இணையதள முகவரியில் விண்ணப்பித்து, ஏலத்தொகையை செலுத்தி பங்கேற்கலாம்.
நுால் மில்லில் தீ விபத்து
ஈரோடு, ஜூலை 12-
மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூர் மலை அடிவாரத்தில், கரிய காளியம்மன் ஸ்பின்னிங் மில் இயங்குகிறது. மில்லில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தீ விபத்து
ஏற்பட்டது.
மொடக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்றனர். 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். மில்லில் இருந்த கோன், பஞ்சு மூட்டை, கழிவு பஞ்சு கருகின. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அறச்சலுார் போலீசார்
விசாரிக்கின்றனர்.