/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடக்கம் மனுக்களுக்கு 30 நாளில் தீர்வு காண முடிவு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடக்கம் மனுக்களுக்கு 30 நாளில் தீர்வு காண முடிவு
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடக்கம் மனுக்களுக்கு 30 நாளில் தீர்வு காண முடிவு
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடக்கம் மனுக்களுக்கு 30 நாளில் தீர்வு காண முடிவு
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடக்கம் மனுக்களுக்கு 30 நாளில் தீர்வு காண முடிவு
ADDED : ஜூலை 12, 2024 01:44 AM
சென்னிமலை, சென்னிமலை யூனியன் குமாரவலசு ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளோட்டில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நேற்று நடந்தது.
அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். நான்கு பயனாளிகளுக்கு அண்ணல் அம்பேத்கார் தொழில் முனைவோர் திட்டத்தில், 9 லட்சம் ரூபாய் ஒப்பளிப்பு மானியத்தை வழங்கினார்.
விழாவில் அவர் பேசியதாவது: மாவட்டத்தில் உள்ள, 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 214 ஊராட்சிகளில், இன்று (நேற்று) தொடங்கி, 14ம் தேதி வரை, இத்திட்டத்தில், 72 முகாம் நடத்தப்படவுள்ளது. இதில், 15 துறைகள் பங்கேற்று, 44 வகையான சேவை வழங்கப்படவுள்ளது. இந்த மனுக்களுக்கு, 30 நாட்களில் தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ராஜ்யசபா எம்.பி., செல்வராஜ், ஈரோடு எம்.பி., பிரகாஷ், மேயர் நாகரத்தினம், சென்னிமலை சேர்மேன் காயத்ரி இளங்கோ, குமாரவலசு ஊராட்சி தலைவர் இளங்கோ, சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் செங்கோட்டையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.