/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அரசு ஐ.டி.ஐ.,க்களில் நாளை முதல் நேரடி சேர்க்கை அரசு ஐ.டி.ஐ.,க்களில் நாளை முதல் நேரடி சேர்க்கை
அரசு ஐ.டி.ஐ.,க்களில் நாளை முதல் நேரடி சேர்க்கை
அரசு ஐ.டி.ஐ.,க்களில் நாளை முதல் நேரடி சேர்க்கை
அரசு ஐ.டி.ஐ.,க்களில் நாளை முதல் நேரடி சேர்க்கை
ADDED : ஜூன் 30, 2024 03:53 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நாளை தொடங்குகிறது.
இதுகுறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஈரோடு, கோபியில் செயல்படும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் முதற்கட்ட கலந்தாய்வு சேர்க்கை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நடப்பாண்டுக்கான நேரடி சேர்க்கை நாளை முதல், 15ம் தேதி வரை நடக்கவுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை உண்டு.
எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021ம் ஆண்டு கொரோனா காலத்தில் 10ம் வகுப்பு முடித்திருந்தால் 9ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்), மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, நான்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் வரவும். சேர்க்கை கட்டணம், 200 ரூபாய். ஒரு அசல் மதிப்பெண் சான்றிதழுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு சான்றிதழுக்கும், 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு ஈரோடு அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை, 0424-2-275244, 70108 75256 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.