/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோவில் நிலத்தை மீட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கோவில் நிலத்தை மீட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கோவில் நிலத்தை மீட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கோவில் நிலத்தை மீட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கோவில் நிலத்தை மீட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 14, 2024 01:23 AM
பவானி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பவானி அந்தியூர் பிரிவில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட நில மீட்பு அமைப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
சின்னப்புலியூர் கருப்புசாமி மற்றும் வீரண்ணன் கோவில் நிலத்தை, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க வேண்டும். வன்கொடுமை புகாரில் போலீசார் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட வருவாய் அதிகாரிகள், தலித் மக்களின் புகார்களுக்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தலைமை நிலைய முதன்மை செயலாளர் பாவரசு, மாவட்ட செயலாளர்கள் ஈஸ்வரன், சாதிக், பவானி நகர செயலாளர் முடியரசு, அந்தியூர் ஒன்றிய செயலாளர் தங்கராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.