/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிலிண்டர் வெடித்து தீ தொழிலாளி படுகாயம் சிலிண்டர் வெடித்து தீ தொழிலாளி படுகாயம்
சிலிண்டர் வெடித்து தீ தொழிலாளி படுகாயம்
சிலிண்டர் வெடித்து தீ தொழிலாளி படுகாயம்
சிலிண்டர் வெடித்து தீ தொழிலாளி படுகாயம்
ADDED : ஜூன் 14, 2024 01:23 AM
ஈரோடு, ஈரோடு, சூரம்பட்டி, மறைமலை அடிகள் வீதியில் தண்ணீர் உறிஞ்சும் மின் மோட்டார்களுக்கு பயன்படுத்தப்படும் வாசர் (ரோப்) தயாரிக்கும் கம்பெனி செயல்படுகிறது. வடமாநில தொழிலாளர்கள் பணி செய்கின்றனர்.
நேற்று மதியம் ஆறு பேர் பணி செய்தனர். அதேசமயம் கம்பெனியின் ஒதுக்குப்புறம் உள்ள இடத்தில் சமையல் செய்தனர். அங்கிருந்த காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது. இதை பார்த்த ஒடிஸா மாநிலத்தை சேர்ந்த ரபி, 30, ஓடிச்சென்று பார்த்தார்.
எதிர்பாராமல் சிலிண்டர் வெடித்து, அப்பகுதியில் இருந்த பொருட்களில் தீப்பிடித்து எரிந்தது. ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். அதேசயம் படுகாயமடைந்த ரபி, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள், கம்பெனியில் ஆய்வு செய்தனர். சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.